புதன், 27 மே, 2009
அபூஸயீத் (ரலி), அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள் :
''சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்ததும், ஓர் அழைப்பாளர் (வானவர்), ''நிச்சயமாக உங்களுக்கு நிரந்தரமான வாழ்க்கை உண்டு. எக்காலமும் நீங்கள் இறந்து விட மாட்டீர்கள். நிச்சயமாக உடல் நலத்துடன் இருப்பது உண்டு. எக்காலமும் நீங்கள் நோயாளியாகி விட மாட்டீர்கள். நிச்சயமாக நீங்கள் வாலிபர்களாக இருப்பதுண்டு. எக்காலமும் நீங்கள் முதுமையாகி விடமாட்டீர்கள். நீங்கள் இங்கு சுகத்தை அனுபவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. எக்காலமும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள் என அறிவிப்பு செய்வார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1892)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''சொர்க்கத்தில் உங்களில் ஒருவரின் தாழ்ந்த நிலை என்பது, அவரிடம் அல்லாஹ் ''நீ ஆசை கொள்'' என்று கூறுவதுதான். உடனே அவர் ஆசை கொள்வார். மேலும் ஆசை கொள்வார். ''நீ ஆசை கொண்டாயா?''என்று அல்லாஹ் அவரிடம் கேட்பான். ''ஆம்'' என்பார். உடனே அல்லாஹ் அவரிடம் ''நிச்சயமாக நீ நினைத்தது உனக்குண்டு. மேலும் அத்துடன் அது போன்றதும் உண்டு'' என்று கூறுவான் என நபி (ஸல்) கூறினார்கள்.
(முஸ்லிம்)( ரியாளுஸ்ஸாலிஹீன்:1893)
அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''சொர்க்கவாசிகளைப் பார்த்து அல்லாஹ், ''சொர்க்கவாசிகளே!'' என்று அழைப்பான். உடனே அவர்கள், ''எங்கள் இறைவா! உன்னிடம் ஆஜாரகி விட்டோம். உன்னிடம் வந்து விட்டோம். நன்மைகள் அனைத்தும் உன் வசமே உள்ளது'' என்று கூறுவார்கள். ''நீங்கள் திருப்தி அடைந்தீர்களா?'' என்று அல்லாஹ் கேட்பான். உடனே அவர்கள், ''எங்கள் இறைவா! நாங்கள் எப்படி திருப்தி அடையாமல் இருப்போம். உன் படைப்பினங்களில் எவருக்கும் நீ அளிக்காத ஒன்றை எங்களுக்குக் கொடுத்துள்ளாயே?'' என்று கூறுவார்கள். '' இதைவிட மிகச் சிறந்ததை உங்களுக்கு நான் கொடுக்கட்டுமா?'' என்று கேட்பான். ''இதையும் விட மிகச் சிறந்தது எது?'' என்று அவர்கள் கேட்பார்கள். உடனே அவன் ''உங்களுக்கு என் திருப்தியை தந்து விட்டேன். இதன் பின் எப்போதும் உங்களிடம் நான் கோபம் கொள்ள மாட்டேன்'' என்று கூறுவான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
(புகாரி,முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1894 )
ஜரீர் இப்னு அப்துல்லா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நபி(ஸல்) அவர்களின் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள் பவுர்ணமி இரவு நிலவைக் கண்டார்கள். ''இந்த நிலாவை நீங்கள் பார்ப்பது போல், நிச்சயமாக நீங்கள் உங்கள் இறைவனைக் கண்களால் மறுமையில் காண்பீர்கள். அவனைப் பார்க்கும் விஷயத்தில் இடைஞ்சல் - இடையூறு அளிக்கப்படமாட்டீர்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1895 ) சுஹைப் (ரலி) அறிவிக்கின்றார்கள்: 'சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டால், அல்லாஹ் ''எதையேனும் நீங்கள் விரும்பினால் உங்களுக்கு அதிகப்படுத்துகிறேன்''என்று கூறுவான். அதற்கு அவர்கள் ''எங்களின் முகங்களை நீ வெண்மையாக்கிவிடவில்லையா? சொர்க்கத்தில் எங்களை நுழையச் செய்து நரகை விட்டும் எங்களை நீ காப்பாற்றிவிடவில்லையா?'' என்று கூறுவார்கள். உடனே அல்லாஹ் (தனக்கும், அவர்களுக்குமிடையே உள்ள) திரையை திறப்பான். தங்களின் இறைவனை அவர்கள் பார்ப்பதை விட, அவர்களுக்கு விருப்பமான, வேறு எதையும் அவர்கள் வழங்கப்படவில்லை. (அவனைப் பார்ப்பதுதான் மிக விருப்பமானது)'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1896 )
அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்களை அவர்கள் நம்பிக்கை கொண்டதன் காரணமாக அவர்களின் இறைவன் இன்பம் நிறைந்த சொர்க்கச் சோலைகளில் சேர்ப்பான். அவர்களுக்குக் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். ''அல்லாஹ்வே! நீ தூயவன்''. என்பதே அங்கே அவர்களின் பிரார்த்தனை. ஸலாம் தான் அங்கே அவர்களின் வாழ்த்து. ''அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்பதே அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும்.
(அல்குர்ஆன் : 10 : 9 – 10)
சொர்க்கம் செல்ல வழி
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
1:1. அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
1:2. (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
1:3. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
1:4. (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1:5. நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!
1:6. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.
1:7. (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல. (அல்குர்ஆன் : 1: 1-7)
புதன், 13 மே, 2009
The Four Things
சனி, 9 மே, 2009
Start
மன்ஜில் பற்றிய ஹதீஸ்
மன்ஜில் பற்றிய ஹதீஸ்
ஹஜ்ரத் உபை இப்னு கஅப் (ரலி) அறிவிக்கிறார்கள் : நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தில் இருந்தபோது ஒரு கிராமவாசி அங்கு வந்து , "அல்லாஹ்வின் நபியே! எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவருக்கு நோய் ஏற்பட்டுள்ளது " என்று கூறினார். "அவருடைய நோய் என்ன? " என்று வினவினார்கள். அதற்கவர், " ஒரு வகையான பைத்தியம் " என்றார். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் தங்களின் சமூகத்திற்கு அழைத்து வரச் செய்து " அஊது பில்லாஹி ஓதி , சூரத்துல் பாதிஹா, சூரத்துல் பகராவின் ஆரம்பத்திலுள்ள நான்கு ஆயத்துக்கள், இலாஹுகும் இலாஹுன் வாஹித் என்ற ஆயத்து, ஆயத்துல் குர்ஸீ, சூரத்துல் பகராவின் கடைசியிலுள்ள மூன்று ஆயத்துக்கள், ஸஹிதல்லாஹு அன்னஹு என்ற ஆயத்து, சூரா அராஃபியிலுள்ள இன்னரப்பகு முல்லாஹு என்ற ஆயத்து. சூரா முஹ்மினின் இறுதியிலுள்ள பதஆலல்லாஹுல் மலிக்குல் ஹக் என்ற ஆயத்து, சூரா ஜின்னில் உள்ள வஅன்னஹு தஆலா ஜத்து ரப்பினா என்ற ஆயத்து, சூரா வஸ்ஸாப்பாதிலுள்ள முதல் பத்து ஆயத்துக்கள், சூரா ஹஷ்ருடைய கடைசியிலுள்ள மூன்று ஆயத்துக்கள், சூரா குல்குவல்லாஹு, சூரா குல் அஊது பிரப்பில் பலக், சூரா குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகியவற்றை ஓதினார்கள். உடனே அந்த மனிதர் எழுந்து சென்றார். அவருக்கு நோய் ஏதேனும் இருந்ததாக எண்ணுவதற்குக் கூட இடமில்லாதவாறு அவர் ஆகிவிட்டார்.
(நூல் : கன்ஞ், பாகம் :, பக்கம் 212 )
இந்த மன்ஜில், கண்ணேறு, சூனியம், பைத்தியம், ஷைத்தான், திருடர்கள், விலங்குகள் பயம் மற்றும் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்புப் பெற அனுபவ பூர்வமான அமலாக இருக்கிறது. ஹஜ்ரத் ஷைகுல் ஹதீஸ் முஹமது ஜகரிய்யா ( ரஹ் ) அவர்களும் அவர்களது குடும்பப் பெரியார்களும் அமல் செய்து பலன் கண்ட அரும் மருந்தாக இருக்கிறது.
அல்லாஹ்வின் பொருத்தத்தை மனதில் கொண்டு அன்றாடம் ஓதி வந்தால் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும். நாமும் ஓதுவதோடு மற்ற சகோதர முஸ்லிம்களையும் ஓத தூண்டி நன்மைகளை பரப்ப அல்லாஹ் நல்லுதவி செய்வானாக. ஆமீன்!