புதன், 27 மே, 2009

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகியஅல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)

அபூஸயீத் (ரலி), அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள் :

''சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்ததும், ஓர் அழைப்பாளர் (வானவர்), ''நிச்சயமாக உங்களுக்கு நிரந்தரமான வாழ்க்கை உண்டு. எக்காலமும் நீங்கள் இறந்து விட மாட்டீர்கள். நிச்சயமாக உடல் நலத்துடன் இருப்பது உண்டு. எக்காலமும் நீங்கள் நோயாளியாகி விட மாட்டீர்கள். நிச்சயமாக நீங்கள் வாலிபர்களாக இருப்பதுண்டு. எக்காலமும் நீங்கள் முதுமையாகி விடமாட்டீர்கள். நீங்கள் இங்கு சுகத்தை அனுபவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. எக்காலமும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள் என அறிவிப்பு செய்வார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1892)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''சொர்க்கத்தில் உங்களில் ஒருவரின் தாழ்ந்த நிலை என்பது, அவரிடம் அல்லாஹ் ''நீ ஆசை கொள்'' என்று கூறுவதுதான். உடனே அவர் ஆசை கொள்வார். மேலும் ஆசை கொள்வார். ''நீ ஆசை கொண்டாயா?''என்று அல்லாஹ் அவரிடம் கேட்பான். ''ஆம்'' என்பார். உடனே அல்லாஹ் அவரிடம் ''நிச்சயமாக நீ நினைத்தது உனக்குண்டு. மேலும் அத்துடன் அது போன்றதும் உண்டு'' என்று கூறுவான் என நபி (ஸல்) கூறினார்கள்.
(முஸ்லிம்)( ரியாளுஸ்ஸாலிஹீன்:1893)

அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''சொர்க்கவாசிகளைப் பார்த்து அல்லாஹ், ''சொர்க்கவாசிகளே!'' என்று அழைப்பான். உடனே அவர்கள், ''எங்கள் இறைவா! உன்னிடம் ஆஜாரகி விட்டோம். உன்னிடம் வந்து விட்டோம். நன்மைகள் அனைத்தும் உன் வசமே உள்ளது'' என்று கூறுவார்கள். ''நீங்கள் திருப்தி அடைந்தீர்களா?'' என்று அல்லாஹ் கேட்பான். உடனே அவர்கள், ''எங்கள் இறைவா! நாங்கள் எப்படி திருப்தி அடையாமல் இருப்போம். உன் படைப்பினங்களில் எவருக்கும் நீ அளிக்காத ஒன்றை எங்களுக்குக் கொடுத்துள்ளாயே?'' என்று கூறுவார்கள். '' இதைவிட மிகச் சிறந்ததை உங்களுக்கு நான் கொடுக்கட்டுமா?'' என்று கேட்பான். ''இதையும் விட மிகச் சிறந்தது எது?'' என்று அவர்கள் கேட்பார்கள். உடனே அவன் ''உங்களுக்கு என் திருப்தியை தந்து விட்டேன். இதன் பின் எப்போதும் உங்களிடம் நான் கோபம் கொள்ள மாட்டேன்'' என்று கூறுவான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
(புகாரி,முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1894 )

ஜரீர் இப்னு அப்துல்லா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நபி(ஸல்) அவர்களின் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள் பவுர்ணமி இரவு நிலவைக் கண்டார்கள். ''இந்த நிலாவை நீங்கள் பார்ப்பது போல், நிச்சயமாக நீங்கள் உங்கள் இறைவனைக் கண்களால் மறுமையில் காண்பீர்கள். அவனைப் பார்க்கும் விஷயத்தில் இடைஞ்சல் - இடையூறு அளிக்கப்படமாட்டீர்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1895 ) சுஹைப் (ரலி) அறிவிக்கின்றார்கள்: 'சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டால், அல்லாஹ் ''எதையேனும் நீங்கள் விரும்பினால் உங்களுக்கு அதிகப்படுத்துகிறேன்''என்று கூறுவான். அதற்கு அவர்கள் ''எங்களின் முகங்களை நீ வெண்மையாக்கிவிடவில்லையா? சொர்க்கத்தில் எங்களை நுழையச் செய்து நரகை விட்டும் எங்களை நீ காப்பாற்றிவிடவில்லையா?'' என்று கூறுவார்கள். உடனே அல்லாஹ் (தனக்கும், அவர்களுக்குமிடையே உள்ள) திரையை திறப்பான். தங்களின் இறைவனை அவர்கள் பார்ப்பதை விட, அவர்களுக்கு விருப்பமான, வேறு எதையும் அவர்கள் வழங்கப்படவில்லை. (அவனைப் பார்ப்பதுதான் மிக விருப்பமானது)'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1896 )

அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்களை அவர்கள் நம்பிக்கை கொண்டதன் காரணமாக அவர்களின் இறைவன் இன்பம் நிறைந்த சொர்க்கச் சோலைகளில் சேர்ப்பான். அவர்களுக்குக் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். ''அல்லாஹ்வே! நீ தூயவன்''. என்பதே அங்கே அவர்களின் பிரார்த்தனை. ஸலாம் தான் அங்கே அவர்களின் வாழ்த்து. ''அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்பதே அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும்.
(அல்குர்ஆன் : 10 : 9 – 10)

சொர்க்கம் செல்ல வழி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரகாத்துஹூ,,,


சொர்க்கம் செல்ல இலகுவான வழிகளில் ஒன்று எப்போது ஒலுச் செய்தாலும் இரண்டு ரகாத்துகள் தொழுவ‌தாகும். இந்த பழக்கத்தை கடைபிடித்தால் சொர்க்கம் செல்லும் வ‌ழி நம‌க்கு இலகுவாகும் என்பதைப் பின்வரும் நபிமொழி நமக்குத் தெளிவாக விளக்குகிறது.


ஒரு முஸ்லீம் அழ‌கிய‌ முறையில் உளுச் செய்து அக‌த்தையும் முக‌த்தையும் ஒருமுக‌ப்ப‌டுத்தித் தொழுதால் அவ‌ருக்குச் சொர்க்க‌ம் க‌ட்டாய‌மாகாம‌ல் இருப்ப‌தில்லை. என்று ந‌பிக‌ள் (ஸ‌ல்)அவ‌ர்க‌ள் கூறினார்க‌ள்.அறிவிப்பாளர் - உக்பா பின் ஆமிர் (ர‌லி)

நூல் (முஸ்லீம் 397 )


இதே பழகத்தை இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து கடைபிடித்து வந்த பிலால் (ரலி) அவர்கள் சொர்கத்துக்குறியவர் என்று இவ்வுல‌கத்துலேயே நபிகளார் சுபச் செய்தி கூறியுள்ளார்கள்.


ஒரு ப‌ஜ்ருத் தொழுகையின் போது பிலால் ( ர‌லி) யிட‌ம், பிலாலே! இஸ்லாத்தில் இனைந்த‌பின் நீர் செய்த‌ சிற‌ந்த‌ அம‌ல் ப‌ற்றிக் கூறுவிராக‌. ஏனெனில் உம‌து செருப்போசையை சொர்க‌த்தில் நான் கேட்டேன் என்று ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் கேட்டார்க‌ள். அத‌ற்கு பிலால் (ர‌லி), இர‌விலோ ப‌க‌லிலோ நான் உளுச்செய்தால் அவ்வுளுவின் மூல‌ம் நான் தொழ‌ வேண்டும்மென்று நாடிய‌தைத் தொழாம‌ல் இருப்ப‌தில்லை. இதுதான் என‌து செய‌ல்க‌ளில் சிற‌ந்த‌ செய‌ல். என்று விடைய‌ளித்தார்க‌ள். அறிவிப்பாளர் அபுஹுரைரா (ர‌லி)

நூல் (புஹாரி 1149)

மேலும் இறைவ‌னை வ‌ண‌ங்குவ‌த‌ற்காக‌ ஒருவ‌ர் ஒளுச் செய்யும் போது அவ‌ர் உறுப்புக‌ள் செய்த‌ பாவ‌ங்க‌ளும் ம‌ன்னிக்க‌ப் ப‌டுகின்ற‌ன‌.


ஒரு முஸ்லீமான‌ அல்ல‌து முஃமினான‌ அடியார் உளுச் செய்யும் போது முக‌த்தைக் க‌ழுவினால், க‌ண்க‌லால் பார்த்துச் செய்த‌ பாவ‌ங்க‌ள் அனைத்தும் ( முக‌த்தைக் க‌ழுவிய‌ ) நீருட‌ன் அல்ல‌து நீரின் க‌டைசித்துளியுட‌ன் முக‌த்திலிருந்து வெளியேறுகின்ற‌ன‌. அவ‌ர் கைக‌ளைக் க‌ழுவும்போது கைக‌ளால் ப‌ற்றிச் செய்த‌ பாவ‌ங்க‌ள் அனைத்தும் ( கைக‌ளைக் க‌ழுவிய‌) த‌ண்ணீருட‌ன் அல்ல‌து த‌ண்ணீரின் க‌டைசித்துளியுட‌ன் வெளியேருகின்ற‌ன‌.அவ‌ர் கால்க‌ளைக் க‌ழுவும்போது கால்க‌ளால் ந‌ட‌ந்து செய்த‌ பாவ‌ங்க‌ள் அனைத்தும் (கால்க‌ளைக் க‌ழுவிய‌ ) நீறோடு அல்ல‌து நீரின் க‌டைசித்துளியோடு வெளியேறுகின்ற‌ன‌.இறுதியில் அவ‌ர் பாவ‌ங்க‌ளில்லிருந்து தூய்மை அடைந்த‌வ‌ராக‌ (அந்த‌ இட‌த்திலிருந்து) செல்கிறார் என்று ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் கூறினார்க‌ள்.

அறிவிப்பாள‌ர் அபுஹூரைரா (ர‌லி)

நூல்(முஸ்லீம் 412)


ஒரு மனிதன் ஒவ்வொரு உளுவின் போதும் தொழுகையைக் கடைபிடித்து வந்தால் அவரிடம நற்செயல்கள் குடிகொள்வதுடன் தீய செயல்களும் அவறைவிட்டு அகன்றுவிடும். இது தொழுகையைப் பின்பற்றுவதால் ஏற்படும் கிடைக்கும் நன்மை என்று அல்லாஹ் கூறியுள்ளான்.


தொழுகையை நிலைநாட்டுவிராக !. தொழுகை வெட்கக் கேடான காரியங்களைவிட்டும் தீமையைவிட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.

(அல்குர்ஆன் 29.45)


ஒவ்வொரு ஒளுவின்போது இரண்டு ரகாத் தொழுவது கடுமையான காரியம் ஒன்றும் இல்லை. கொஞ்சம் முயற்ச்சி செய்தால் சாதாரணமாக செய்து விடலாம். இதை அற்பமான காரியமாக நினைத்து விட்டுவிடாமல் ஒவ்வொரு உளுவின்போதும் குறைந்த பட்ச்சம் இரண்டு ரகாத்துகளாவது தொழும் பழகத்தை தொடர்ந்து கடைப்பிடித்து சொர்கத்துக்கு செல்லும் வழிகளை இலகுவாக்குவோம். இன்ஷாஅல்லாஹ்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

1:1. அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

1:2. (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.

1:3. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

1:4. (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

1:5. நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!

1:6. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.

1:7. (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல. (அல்குர்ஆன் : 1: 1-7)

அபூஹூரைரா(ரலி)அறிவிக்கின்றார்கள்:

''ஒரு மனிதனின் அழகிய இஸ்லாமிய பண்புகளில்; அவன் தனக்கு அவசியம் இல்லாததை விட்டு விடுவதும் ஒன்றாகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'

(திர்மிதீ. இந்த ஹதீஸ் 'ஹஸன்' என திர்மிதீ இமாம் கூறுகிறார்கள்).


( ரியாளுஸ்ஸாலிஹீன்: 67)

''ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்;கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''.

(நூல்: புகாரி, முஸ்லிம்)

புதன், 13 மே, 2009

The Four Things

The Holy Prophet (Peace be upon him & his progeny) Said:

1)  Four things that make your body sick:

a) Excessive talking
b) Excessive sleeping
c) Excessive eating and
d) Excessive meeting other people

2)  Four things that destroys the body

a)  Worrying
b)  Sorrow (Sadness/Grief)
c)  Hunger
d)  Sleeping late in the night

3)  Four things that dry the face & take away its happiness:

a)  Lying
b)  Being disrespectful / impudent (insisting on something wrong knowingly)
c)  Arguing without adequate knowledge & Information.
d)  Excessive immorality (doing something wrong without fear).

4)  Four things that increases the wetness of face & its happiness:

a)  Piety
b)  Loyalty
c)  Generosity (being kind)
d)  To be helpful to others without he/she asking for that.

5)  Four things that stop the Rizq (Sustenance) :

a)  Sleeping in the morning (from Fajr to sunrise)
b)  Not Performing Namaz or Ir-regular in Prayers
c)  Laziness / Idleness
d)  Treachery / Dishonesty

6)  Four things that bring / increase the Rizq:

a)  Staying up in the night for prayers.
b)  Excessive Repentance
c)  Regular Charity
d)  Zikr (Remembrance of Allah )

     The Holy Prophet (Peace be upon him & his progeny), Also
said to Communicate to others even if you listen One Verse (Ayah)
 & this one verse will stand on the Day of Judgment for intercession.

சனி, 9 மே, 2009

Start

அஊது பில்லாஹி மினஷைத்தானிர் ரஜீம்
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

    அல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம். மாலிகி யவ்மித்தீன். இய்யாக நஃபுது வஇய்யாக நஷ்தஈன். இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம். ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம் ஙைரில் மங்ளூபி அலைஹிம் வலள்ளால்லீன். ( ஆமீன் )

மன்ஜில் பற்றிய ஹதீஸ்

மன்ஜில் பற்றிய ஹதீஸ்

ஹஜ்ரத் உபை இப்னு கஅப் (ரலி) அறிவிக்கிறார்கள் : நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தில் இருந்தபோது ஒரு கிராமவாசி அங்கு வந்து , "அல்லாஹ்வின் நபியே! எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவருக்கு நோய் ஏற்பட்டுள்ளது " என்று கூறினார். "அவருடைய நோய் என்ன? " என்று வினவினார்கள். அதற்கவர், " ஒரு வகையான பைத்தியம் " என்றார். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் தங்களின் சமூகத்திற்கு அழைத்து வரச் செய்து " அஊது பில்லாஹி ஓதி , சூரத்துல் பாதிஹா, சூரத்துல் பகராவின் ஆரம்பத்திலுள்ள நான்கு ஆயத்துக்கள், இலாஹுகும் இலாஹுன் வாஹித் என்ற ஆயத்து, ஆயத்துல் குர்ஸீ, சூரத்துல் பகராவின் கடைசியிலுள்ள மூன்று ஆயத்துக்கள், ஸஹிதல்லாஹு அன்னஹு என்ற ஆயத்து, சூரா அராஃபியிலுள்ள இன்னரப்பகு முல்லாஹு என்ற ஆயத்து. சூரா முஹ்மினின் இறுதியிலுள்ள பதஆலல்லாஹுல் மலிக்குல் ஹக் என்ற ஆயத்து, சூரா ஜின்னில் உள்ள வஅன்னஹு தஆலா ஜத்து ரப்பினா என்ற ஆயத்து, சூரா வஸ்ஸாப்பாதிலுள்ள முதல் பத்து ஆயத்துக்கள், சூரா ஹஷ்ருடைய கடைசியிலுள்ள மூன்று ஆயத்துக்கள், சூரா குல்குவல்லாஹு, சூரா குல் அஊது பிரப்பில் பலக், சூரா குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகியவற்றை ஓதினார்கள். உடனே அந்த மனிதர் எழுந்து சென்றார். அவருக்கு நோய் ஏதேனும் இருந்ததாக எண்ணுவதற்குக் கூட இடமில்லாதவாறு அவர் ஆகிவிட்டார்.

(நூல் : கன்ஞ், பாகம் :, பக்கம் 212 )

இந்த மன்ஜில், கண்ணேறு, சூனியம், பைத்தியம், ஷைத்தான், திருடர்கள், விலங்குகள் பயம் மற்றும் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்புப் பெற அனுபவ பூர்வமான அமலாக இருக்கிறது. ஹஜ்ரத் ஷைகுல் ஹதீஸ் முஹமது ஜகரிய்யா ( ரஹ் ) அவர்களும் அவர்களது குடும்பப் பெரியார்களும் அமல் செய்து பலன் கண்ட அரும் மருந்தாக இருக்கிறது.

அல்லாஹ்வின் பொருத்தத்தை மனதில் கொண்டு அன்றாடம் ஓதி வந்தால் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும். நாமும் ஓதுவதோடு மற்ற சகோதர முஸ்லிம்களையும் ஓத தூண்டி நன்மைகளை பரப்ப அல்லாஹ் நல்லுதவி செய்வானாக. ஆமீன்!