சனி, 9 மே, 2009

மன்ஜில் பற்றிய ஹதீஸ்

மன்ஜில் பற்றிய ஹதீஸ்

ஹஜ்ரத் உபை இப்னு கஅப் (ரலி) அறிவிக்கிறார்கள் : நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தில் இருந்தபோது ஒரு கிராமவாசி அங்கு வந்து , "அல்லாஹ்வின் நபியே! எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவருக்கு நோய் ஏற்பட்டுள்ளது " என்று கூறினார். "அவருடைய நோய் என்ன? " என்று வினவினார்கள். அதற்கவர், " ஒரு வகையான பைத்தியம் " என்றார். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் தங்களின் சமூகத்திற்கு அழைத்து வரச் செய்து " அஊது பில்லாஹி ஓதி , சூரத்துல் பாதிஹா, சூரத்துல் பகராவின் ஆரம்பத்திலுள்ள நான்கு ஆயத்துக்கள், இலாஹுகும் இலாஹுன் வாஹித் என்ற ஆயத்து, ஆயத்துல் குர்ஸீ, சூரத்துல் பகராவின் கடைசியிலுள்ள மூன்று ஆயத்துக்கள், ஸஹிதல்லாஹு அன்னஹு என்ற ஆயத்து, சூரா அராஃபியிலுள்ள இன்னரப்பகு முல்லாஹு என்ற ஆயத்து. சூரா முஹ்மினின் இறுதியிலுள்ள பதஆலல்லாஹுல் மலிக்குல் ஹக் என்ற ஆயத்து, சூரா ஜின்னில் உள்ள வஅன்னஹு தஆலா ஜத்து ரப்பினா என்ற ஆயத்து, சூரா வஸ்ஸாப்பாதிலுள்ள முதல் பத்து ஆயத்துக்கள், சூரா ஹஷ்ருடைய கடைசியிலுள்ள மூன்று ஆயத்துக்கள், சூரா குல்குவல்லாஹு, சூரா குல் அஊது பிரப்பில் பலக், சூரா குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகியவற்றை ஓதினார்கள். உடனே அந்த மனிதர் எழுந்து சென்றார். அவருக்கு நோய் ஏதேனும் இருந்ததாக எண்ணுவதற்குக் கூட இடமில்லாதவாறு அவர் ஆகிவிட்டார்.

(நூல் : கன்ஞ், பாகம் :, பக்கம் 212 )

இந்த மன்ஜில், கண்ணேறு, சூனியம், பைத்தியம், ஷைத்தான், திருடர்கள், விலங்குகள் பயம் மற்றும் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்புப் பெற அனுபவ பூர்வமான அமலாக இருக்கிறது. ஹஜ்ரத் ஷைகுல் ஹதீஸ் முஹமது ஜகரிய்யா ( ரஹ் ) அவர்களும் அவர்களது குடும்பப் பெரியார்களும் அமல் செய்து பலன் கண்ட அரும் மருந்தாக இருக்கிறது.

அல்லாஹ்வின் பொருத்தத்தை மனதில் கொண்டு அன்றாடம் ஓதி வந்தால் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும். நாமும் ஓதுவதோடு மற்ற சகோதர முஸ்லிம்களையும் ஓத தூண்டி நன்மைகளை பரப்ப அல்லாஹ் நல்லுதவி செய்வானாக. ஆமீன்!

2 கருத்துகள்:

  1. இஸ்லாம் மார்க்கம் என்பது அல்லாஹ்விற்க்கு உரியது . அவன் கற்றுத் தராததை கற்றுத்தருவது பெரும்பாவமாகும். பாவங்களை சம்பாதிக்காதீர்கள்

    பதிலளிநீக்கு